தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளது -பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

#SriLanka #Police #Parliament #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளது -பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 “.. தனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் உள்ளதாக புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது. ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருந்தும் இந்த பணியை ஏற்றுக்கொண்டேன். நான் இந்தப் பதவியில் இருக்கும் வரைக்கும் போதைப்பொருள் கடத்தல் பாதாள உலகத்தை ஒழிக்க வேண்டும். 

அதனால் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். நமது பாதுகாப்பினை முன்னெச்சரிக்கையாக கொண்டு நாம் பாடுபட வேண்டும். அப்படி மிரட்டல்கள் இருந்தால் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன். அப்படி நடந்தால் ஒரு அடி கூட பின்வாங்காமல் இன்னொரு அடி முன்னே வைப்பேன்…”என தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!