“மாதச் சம்பளம் போதாது” என்று எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்
நுங்கமுவ பொலிஸ் நிலையத்தின் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (21ஆம் திகதி) காலை தனது வீட்டிற்குச் சென்றதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது,
தனது அன்றாட தகவல் குறிப்பேட்டில் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு மாதாந்த சம்பளம் போதுமானதாக இல்லை என குறிப்பொன்றை வைத்துள்ளார்.
இவ்வாறு பொலிஸ் சேவையில் சுமார் ஒரு வருட காலம் கடமையாற்றிய பொல்கம்பல வரலஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே பொலிஸ் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.
பொலிஸ் சேவையிலிருந்து விலகிய பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள், பயிற்சியை முடித்து வெயங்கொட நுங்கமுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பணியில் இருக்கும் போது பெறும் சம்பளம் சேவை செய்வதற்கு கூட போதாது எனவும்இ பணியின் போது பல்வேறு அசௌகரியங்கள் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறும் போது குறித்த விபரங்களை குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் குறிப்பேட்டில் உள்ள குறித்த குறிப்பிற்கு மேலதிகமாக, இந்த புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் யாருக்கும் தெரிவிக்காமல் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியதுடன், வரலாஸ் பிட்டிய, பொல்கம்பலா என்ற முகவரிக்கு செல்வதாகவும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார்இ உயர் பொலஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.