இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.

#SriLanka #Srilanka Cricket #Cricket
Kanimoli
2 years ago
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை(20) கொழும்பில் நடைபெறவுள்ளது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏழு பதவி நிலைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

 இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, ஜயந்த தர்மதாஸ மற்றும் சமந்த தொடன்வல உள்ளிட்டோர் தலைவர் பதவிக்காகவும் தற்போதைய செயலாளர் மொஹான் டி சில்வா, ரொஷான் இத்தமல்கொட, நலின் அபோன்ஸ் உள்ளிட்டவர்கள் செயலாளர் பதவிக்காகவும் போட்டியிடவுள்ளனர்.

 நாளைய வாக்கெடுப்பின் போது இரண்டு உப தலைவர்கள், உப செயலாளர், உப பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!