பாதுகாப்பற்ற ஊர்காவற்றுறை காரைநகர் பாதை இன்று விபத்து
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
பாதுகாப்பற்ற ஊர்காவற்றுறை காரைநகர் பாதை இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் கடலுக்குள் விழுந்துள்ளனர்.
அவர்களை பாதுகாப்பாக அதில் வேலை செய்பவர்கள் அவர்களை மீட்டு எடுத்துள்ளனர்.
பாதை இடை நிறுத்தப்பட்டு ஏனையவர்களை படகில் செல்வதற்கு படகை இயக்குவதற்கு சிரமப்பட்டு இயக்கினார் ,
இப்பாதையானது இப்படி நீண்டகாலமாக் இயங்கும் பாதை இதனை மாறுவதற்கான நடவடிக்கை எடுக்காமை இருப்பது மனவேதனைக்கு உரிய விடயம் என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .
இப்பாதை துருப்பிடித்து இருப்பதால் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு காயங்களும் ஏற்படுகின்றன, இதனை மாற்றி புதிய பாதை அமைக்காமல் இருப்பது சிந்திக்கவேண்டிய விடயமே , உயிரிழப்பு ஏற்பட்டபிறகு இதை பற்றி கதைத்து பயனிலை இதனால் பாரிய விபத்து ஏற்பட முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்