பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் மற்றும் சிறுவர், பெண்கள் தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்களால் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டத்தில பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் மற்றும் சிறுவர், பெண்கள் தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்களால் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (19.05.2023) இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண பெண்கள் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள்.
வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களான SOS Children'sWomen in Need,Center for Women development ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர், சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.