ஜப்பானிய ஐஸ்கிரீம்- உலகின் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என கின்னஸ் சாதனை!
#world_news
#Japan
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#WorldRecord
Mani
2 years ago
ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த 'பைகுயா' உலகின் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதன்விலை 8 லட்சத்து 73ஆயிரத்து 400 ஜப்பானிய யென், அதாவது இந்திய மதிப்பில் ஐந்தரை லட்சம் ரூபாயாகும்.
இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதால், விலை அதிகமாக இருப்பதற்கு காரணமென கூறப்படுகிறது.
இதன் விலை ஒருகிலோவிற்கு 2 மில்லியன் ஜப்பானிய யென். மற்ற சிறப்பு பொருட்களான பார்மிஜியானோ ரெஜியானோ மற்றும் சேக் லீஸ் ஆகியவை இதில் மூலப்பொருட்களாக அடங்கும்.