சிங்கப்பூரில் இலங்கைப் பெண் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Singapore
Mayoorikka
2 years ago
சிங்கப்பூரில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகிறது.
தான் பணியாற்றும் வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் பிரச்சினை செய்வதாகவும் தான் இலங்கை செல்ல விரும்புவதாகவும் உயிரிழந்த பெண் தனது நண்பிகளிடம் ஏற்கனவே கூறியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.