தாய்லந்தில் நடைபெறும் கராத்தே போட்டிக்கு செல்லவுள்ள கிளிநொச்சி மாணவன்!
#SriLanka
#Kilinochchi
#sports
#School Student
Mayoorikka
2 years ago
தாய்லந்தில் மே மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகின்ற சர்வதேச ரீதியிலான கராத்தே போட்டியில் பங்குபற்றுவதற்கு கிளிநொச்சி மாணவன் செல்லவுள்ளார்.
கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் வசந்தகுமார் கனிஷ்டன் என்பவரே தாய்லந்தில் நடைபெறவுள்ள கராத்தே போட்டியில் பங்குபற்றுவதற்காக திறந்த போட்டி ஒன்றில் பங்குபற்றவுள்ளார்.
குறித்த மாணவன் கராத்தே கலையில் சிறந்த மாணவனாக விளங்குகின்றார்.
கராத்தே போட்டியில் வெற்றி பெறுவதற்காக வசந்தகுமார் கனிஷ்டனுக்கு லங்கா4 ஊடகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
