நான்கில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது: விசேட வைத்திய நிபுணர்

#SriLanka #Health #doctor #Lanka4 #sri lanka tamil news #Heart Attack
Prathees
2 years ago
நான்கில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது: விசேட வைத்திய நிபுணர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணரும் கொழும்பு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான வித்யாஜோதி பிரசாத் கட்டுலந்த, இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 17ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 27.8 சதவீதம் பேர் ஆண்கள், 23.8 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அவர் கூறினார்.

 நகர்ப்புற மக்களில் 26.5 சதவீதமும், கிராமப்புற மக்களில் 22.9 சதவீதமும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராதனை தேசிய வைத்தியசாலையின் சரீர நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ, இலங்கையர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவர்கள் தினமும் அதிகளவு உப்பை உண்பதேயாகும்.

 ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி உப்பை சாப்பிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!