கதவு திடீரென பூட்டப்பட்டதால் ஒரு மணி நேரம் கெப் வண்டிக்குள் சிக்கிக்கொண்ட குழந்தை
கலென்பிந்துனுவெவ நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் பெறுவதற்காக வந்த கெப் வண்டியின் கதவு ஏறக்குறைய ஒரு மணித்தியாலம் பூட்டப்பட்டதையடுத்து சிறிய குழந்தையொன்று வண்டியில் சிக்கிக் கொண்டதையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் குழந்தையை வெளியே எடுக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.
நேற்று (18ஆம் திகதி) குழந்தை தனது தந்தையுடன் கலன்பிந்துனுவெவ நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளது.
குழந்தை கெப் வண்டியில் இருந்தபோதுஇ அவரது தந்தை எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் பம்ப் சென்றுள்ளார்.
குழந்தையின் கையால் கெப் வண்டி கதவு பூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் இருந்தவர்கள் கெப் வண்டின் கதவை உடைக்க முற்பட்டனர்,
பின்னர் குழந்தையின் தந்தை மற்றொரு வண்டியின் உதவியுடன் தனது வீட்டிற்கு சென்று மற்றொரு சாவியை கொண்டு வந்து கெப் வண்டியின் கதவை திறந்துள்ளார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் குழந்தை வண்டியில் சிக்கிய போதும், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.