களனி பல்கலைகழகத்திற்கு முன் சூடுபிடித்த மாணவர் போராட்டம்! 2 பொலிசார் காயம்: 8 பேர் கைது
களனி பல்கலைகழகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் ஆரம்பமான மாணவர் போராட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்த நிலையிலேயே அது இடம்பெற்றுள்ளது.
பல மாணவர்கள் தீபங்களை ஏந்தியவாறு முதலில் பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து கொழும்பு - கண்டி வீதியை நோக்கி நகர்ந்தனர் அதன் பின்னரே இந்த பதற்றமான நிலை ஏற்பட்டது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 08 மாணவர் செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது.
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட போதே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச்சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.