வட்டுக்கோட்டை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- படங்கள் இணைப்பு
#SriLanka
#Jaffna
#Lanka4
#Tamilnews
#Mullivaikkal
Prabha Praneetha
2 years ago
இன்று மாலை வட்டுக்கோட்டை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டதோடு , நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை கிளைத் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் இந்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ.ஜெபநேசன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் உறவினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.