முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கொழும்பில் அதிரடிப்படையினர் குவிப்பு
#SriLanka
#Colombo
#Lanka4
#Sri Lankan Army
#sri lanka tamil news
#Mullivaikkal
Prathees
2 years ago
2009 ஆம் ஆண்டு மே 18 முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு பொரளை மயான சுற்றுவட்டத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இன்றைய தினம் தடைகளை மீறி கொழும்பில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டார்.
