பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
#SriLanka
#Protest
#Britain
#Tamilnews
#TamilNadu Police
#Mullivaikkal
Mayoorikka
2 years ago
பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக தமிழர்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலோடு ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.
இராணுவத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்றவற்றிற்கு நீதி கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் தாய்மார்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

