ஹாரி-மேகன் தம்பதியை புகைப்படக்காரர்கள் காரில் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#world_news #England #Breakingnews #Prince #Photo
Mani
2 years ago
ஹாரி-மேகன் தம்பதியை புகைப்படக்காரர்கள் காரில் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நியூயார்க்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் புகைப்படக்காரர்களால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை இரவு தன்னை துரத்தும் புகைப்படக்காரர்களை தவிர்ப்பதற்காக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே காரில் தப்பிச் சென்றனர். இதனால் கடுமையான விபத்து ஏற்படும் சூழல் உருவானது. இந்த சம்பவம் 1997ல் இளவரசர் ஹாரியின் தாயார் இளவரசி டயானாவின் கார் விபத்தை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. புகைப்படக் கலைஞர்களைத் தவிர்க்க முயன்ற இளவரசி டயானாவின் கார் பாரிஸில் விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் மேகனும் ஹாரியும் ஒரு விருது நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது டயானாவிற்குன் நடந்தத்த போன்ற சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஹாரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சம்பவம் மற்ற சாலைப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. பாதசாரிகளும் இரண்டு நியூயார்க் காவல் துறை அதிகாரிகள் மீதும் வாகனம் மோதும் நிலை ஏற்பட்டது. பின்னர் அரச தம்பதியினர் வாகனத்தில் இருந்து இறங்கினார்கள்” என்றார்.

புகைப்படக்காரர்களை தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் மார்க்கலை, இந்திய-அமெரிக்க வண்டி ஓட்டுநர் சுக்சரண் சிங்கின் காரில் கூட்டிச் செல்லும் படி பாதுகாவலர்கள் கோரினர். சோனி என்று அழைக்கப்படும் சிங், மிட் டவுன் மன்ஹாட்டனில் உள்ள உள்ளூர் போலீஸ் வளாகத்தில் தம்பதியை இறக்கிவிட்டதாகக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், நான் நியூயார்கின் 67வது தெருவில் இருந்தேன், அப்போது பாதுகாவலர் என்னை அழைத்து அரச தமபதிகளை அழைத்து செல்லும் படி கூறினார் என்றார். முன்னதாக, இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேரியும் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று புகைப்படக்காரர்கள் வந்து படம் எடுக்க ஆரம்பித்தார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!