முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு- படங்கள் இணைப்பு
#SriLanka
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
14ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு, சரியாக காலை 10.30மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, அதனையடுத்து பொதுச்சுடரேற்றப்பட்டது. அந்தவகையில் , முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது குடும்பத்தில் 13பேரை இழந்த மன்னாரைச் சேர்ந்ந தாயார் ஒருவர் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அதேவேளை சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது .