முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி!

#SriLanka #Tamil People #Britain #England #Mullivaikkal
Mayoorikka
2 years ago
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூருவதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் ஒன்று கூடி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். 

 தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிடுதல், காணொளி காட்சிப்படுத்தல் மற்றும் கண்காட்சி இடம்பெற்றது.

 கன்சர்வேட்டிவ், லேபர், லிபரல் டெமாக்ராட்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஒன்று கூடி உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசின் கைகளில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

 நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதன் மூலம், குற்றவாளிகள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நடந்த அட்டூழியங்களுக்கு நீதியை உறுதி செய்வதில் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!