செஞ்சோலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி!
இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனி இன்று செஞ்சோலை படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும், இனப்படுகொலையை இளம்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியில் இந்த ஊர்திப் பவனி தொடங்கியது.
இதனை தொடர்ந்து இன்று காலை வள்ளிபுனம் செஞ்சோலை வளாக சந்தியில் இருந்து ஆரம்பமாகிய ஊர்தி பவனி மாபெரும் ஊர்தி பவனியாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையும்.