சீரற்ற காலநிலையால் கடந்த 5 நாட்களில் 6500 பேர் பாதிப்பு

#SriLanka #weather #Rain #Lanka4 #sri lanka tamil news #Disaster
Prathees
2 years ago
சீரற்ற காலநிலையால் கடந்த 5 நாட்களில் 6500 பேர் பாதிப்பு

கடந்த 5 நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1744 குடும்பங்களைச் சேர்ந்த 6564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 அந்த நிலையம் வெளியிட்டுள்ள தினசரி நிலை அறிக்கையின்படிஇ தென் மாகாணத்தில் உள்ள 1697 குடும்பங்களைச் சேர்ந்த 6390 பேர் அவர்களில் அடங்குகின்றனர்

. இந்த அனர்த்தம் காரணமாக 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளைஇ பொதுப் பரீட்சையின் காலப்பகுதியில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட அவசரகால அனர்த்த பதில் தயாரிப்புத் திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக பரீட்சைகள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

 அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கஇ பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவிடம் கையளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!