மொக்கா” பாரிய சூறாவளியானது தென்கிழக்கு பங்காளாதேஷ் மற்றும் வடக்கு மியன்மார் கரைகளைக் கடந்துள்ளது.
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
வடகிழக்கு வங்காளா விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த வலுவடைந்த “மொக்கா” பாரிய சூறாவளியானது, நேற்று 14 ஆம் திகதி நண்பகல் தென்கிழக்கு பங்காளாதேஷ் மற்றும் வடக்கு மியன்மார் கரைகளைக் கடந்துள்ளது.
அது ஒரு தாழமுக்கமாக வலுவிழந்து 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, வங்காள விரிகுடா கடற்பரப்புளிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.