மஹிந்த ஆதரவாளர்கள் அலரி மாளிகையில் கூடிய பின்பே போராட்டம் வன்முறையாக வெடித்தது! சுமந்திரன்
அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டம் மே 9 ஆம் திகதிக்கு பின்னர் தான் வன்முறையாக மாற்றமடைந்தது.
அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது டுவிட்டர் ஊடாக செய்தி வெளியிட்டார்.
ஆனால் தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது உள்ளார்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக யார் மாற்றியது என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
போராட்டத்தை ஆளும் தரப்பினர் அவரவர் எண்ணம் போல் விமர்சிக்கிறார்கள். உண்மையை
மறைத்து விடுகிறார்கள்” என்றார்.