மன்னாரில் மூன்று பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி! பொலிஸ் அத்தியட்சகர் வெளியிட்ட தகவல்
மன்னார் பகுதியில் உள்ள மூன்று பாடசாலை மாணவர்களை சிலர் கடத்த முயன்றதாக பொலிஸாருக்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் பொய்யான முறைப்பாடுகள் எனவும், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த 7-8 நாட்களில் வெள்ளை வேனில் வந்த சிலர் தம்மை கடத்த முயன்றதாக மூன்று பாடசாலை மாணவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
முறைப்பாடுகளின் பிரகாரம் அவ்வாறான சம்பவம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், இந்த மாணவர்கள் யாரேனும் ஒருவரின் செல்வாக்கின் கீழ் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டனவா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் நேற்று (11) ஊடகங்களுக்கு விஷேட வாக்குமூலம் வழங்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.