முள்ளிவாய்க்காலில் படுகொலை நினைவு கஞ்சி நல்லூரில் இடம்பெற்றது
#SriLanka
#Mullivaikkal
Kanimoli
2 years ago
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்ததுடன் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நல்லூரில் இன்று வியாழக்கிழமை (11) இடம் பெற்றுள்ளது.
நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூவி முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில், கொல்லப்பட்ட மக்களுக்கு தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் முன்பாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.