இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!
#SriLanka
#Sri Lanka President
#IMF
#Tamil
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை வாஷிங்டனில் வைத்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதியாகவுள்ளது. நெருக்கடியை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பங்களிப்பை வழங்குவது இப்போது முக்கியமாகும்” என ஜோர்ஜீவா இலங்கைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.



