அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அம்பாறை பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

#SriLanka #Police #suspend #Protest #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அம்பாறை  பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

நீர் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக அம்பாறை கொனகொல்ல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டவர் அம்பாறை வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 26ஆம் திகதி கொனகொல்ல சந்தியில் அரசாங்கத்துக்கு  எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிவில் உடை அணிந்து விடுமுறை அறிவித்தலின்றி கலந்து கொண்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 5 ஆம் திகதி புதன்கிழமை முதல் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!