இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
#SriLanka
#Gold
#prices
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்து வந்தநிலையில், இன்றையதினம் சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 647,221 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,840 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,940 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,990 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.



