இறையாண்மை டொலர் பத்திரங்களை மறுகட்டமைப்பதில் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது

இலங்;கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பவர்கள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் முதிர்வு நீடிப்பு ஆகியவற்றில் 20 சதவீத முக்கிய முடிவினை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டொலர் திட்டத்தில் கொழும்பு இறுதி கையெழுத்திட்டதை அடுத்து, இலங்கையின் 13.4 பில்லியன் டொலர் இறையாண்மை டொலர் பத்திரங்களை மறுகட்டமைப்பதில் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
இந்தநிலையில் குறித்த சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஆறு வருட முதிர்வு நீடிப்பு மற்றும் 15 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரையிலான மறுசீரமைப்புக்கு இணங்கலாம் என்றும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புக்கு பின்னர் குறிப்பிட்ட உள்நாட்டு கடன்களும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.



