பப்புவா நியூ கினியாவில் சிறிய ரக விமான மூலம் போதைப்பொருள் கடத்தல்
#Australia
#drugs
#Flight
#Arrest
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

ஆஸ்திரேலியா நாட்டில் பப்புவா நியூ கினியா என்ற தீவு நாடு அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருளை ஒரு கும்பல் சிறிய ரக விமான மூலம் கடத்தியுள்ளனர்.
இந்த சிறிய ரக விமானம் ரேடாரில் சிக்காமல் இருப்பதற்காக மலைகளுக்கு இடையில் மிகவும் தாழ்வாக பறக்கச் செய்துள்ளனர்.
இருப்பினும் அந்த சிறிய ரக விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக குயின்ஸ்லாந்தில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தரை இறங்கியது.
அப்போது அதனை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் அதிலிருந்த இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 52 கிலோ மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.125 கோடி இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர்.



