புதின் கைது செய்யப்பட்டால் எங்களின் ராக்கெட்டுகள் ஜெர்மனியை கண்டிப்பாக தாக்கும் - ரஷ்ய முன்னாள் அதிபர்

#Ukraine #War #Russia #President #Putin #Arrest #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
புதின் கைது செய்யப்பட்டால் எங்களின் ராக்கெட்டுகள் ஜெர்மனியை கண்டிப்பாக தாக்கும் - ரஷ்ய முன்னாள் அதிபர்

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்திய குற்றத்திற்காக அதிபர் புதினுக்கு மீது சர்வதேச நீதிமன்றம் கைதுவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

ஆனால் இந்த கைதுவாரண்ட் பற்றி ரஷ்ய அதிபர் புதின் கருத்தில் கொள்ளவில்லை.

இதனை அடுத்து இந்த கைதுவாரண்ட் குறித்து ஜெர்மனி அமைச்சர்களில் ஒருவர் கூறியதாவது “புதின் ஜெர்மன் மண்ணில் கால் வைத்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்” என கூறியுள்ளார். 

இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவின் முன்னால் அதிபரான மெத்வதேவ் கூறியதாவது “மிகுந்த பலம் பொருந்திய ரஷ்யாவின் அதிபரை ஜெர்மனியின் மண்ணில் வைத்து கைது செய்தால் அது எங்களுக்கு எதிரான நேரடி போராகவே கருதப்படும். மேலும் எங்களின் ராக்கெட்டுகள் ஜெர்மனியை கண்டிப்பாக தாக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!