12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல்

#Ranil wickremesinghe #Sajith Premadasa #Meeting #julie chung #Lanka4
Kanimoli
2 years ago
12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல்

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(22) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களை தெளிவுபடுத்தும் முதன்மை நோக்கத்துடன் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறிப்பாக, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல், அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!