அங்குருவத்தோட்ட படுகொலையின் பிரதான சந்தேக நபர் கைது

அங்குருவத்தோட்ட படகொட சந்தியில் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொன்றதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் லுணுகம்வெஹர பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட நாளில் சந்தேக நபர் அணிந்திருந்த ஆடைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சந்தேக நபரின் தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தாயும் சகோதரனும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி, படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களால், மங்கள பிரேமவர்தன என்ற 36 வயதுடைய நபர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தை கண்டுபிடிக்க கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



