ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்தமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
#Sri Lanka Teachers
#exam
#Examination
#Court Order
#Lanka4
Kanimoli
2 years ago
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்காக போட்டிப் பரீட்சையை நடத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, 04 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.