சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைத்தது: வெளியான அறிவிப்பு
#SriLanka
#Sri Lanka President
#IMF
#Dollar
#money
#Finance
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதியின் கீழ் முதல் தவணையைப் பெற்றுள்ளது என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை கடந்த தினம் அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



