மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல்!
#SriLanka
#Sri Lanka President
#Election
#Election Commission
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் இடம்பெறாது.
மேலும், உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவதற்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழுவினால் விரைவில் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.



