எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களை கணிசமான விகிதத்தில் குறைக்க வேண்டும் - பாட்டலி
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Champika Ranawaka
#Lanka4
#Sri Lanka President
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களை குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையும் இலங்கை பெட்ரோலிய கூட்டு தாபனமும் தற்போது பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன என்றும் எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறையில் ஊழல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைக்கப்பட்டதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை குறைந்துள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



