தவறான முடிவெடுத்து யுவதி உயிர்மாய்ப்பு
#Hospital
#Death
#Women
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்றையதினம் பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



