பதவிக்காலம் முடிவடைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் விசேட விசாரணையில்

#Local council #SriLanka #sri lanka tamil news #government #Lanka4 #Investigation
Prathees
2 years ago
பதவிக்காலம் முடிவடைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் விசேட விசாரணையில்

பதவிக்காலம் முடிவடைந்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச சொத்துக்களை மீள வழங்குவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நடவடிக்கைகளுக்காக தமது அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஒப்படைக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ள விசேட ஆணையாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஞ்சுள கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!