இலங்கைக்கான கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறவிப்பு இன்று

இலங்கையால் பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி இன்று (21ஆம் திகதி) காலை அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்த பின்னர் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு முதல் தவணையாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளது.மொத்த கடன் தொகையான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நான்கு வருடங்களில் எட்டு தவணைகளாக பெறப்பட உள்ளது.
இந்த தொகையை இலங்கைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையில் இடம்பெற்றது.
நிறைவேற்று சபையின் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நடைபெறவுள்ளதுடன், அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் இலங்கை நேரப்படி நாளை மறுதினம் அந்த ஊடகவியலாளர் மாநாடு நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் இணையவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.



