இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பில் உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Food
#World_Health_Organization
#UN
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

இலங்கையில் தற்பொழுது 32 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வது தெரியவந்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலையும் உணவு பாதுகாப்பும் தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 மாசி மாதத்திற்கான உணவு பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில் 32 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வது தெரியவந்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
தை மாதத்தில் சந்தைகளில் விலைகள் தளம்பல் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள உலக உணவு திட்டம் எனினும் சந்தைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன, பல தரப்பட்ட பொருட்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.



