உண்மையான கொரோனா தரவுகளை சீனா பகிரவேண்டும் - உலக சுகாதார அமைப்பு

#China #Corona Virus #Covid 19 #report #World_Health_Organization #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
உண்மையான கொரோனா தரவுகளை சீனா பகிரவேண்டும் - உலக சுகாதார அமைப்பு

சீனாவின் வுகான் நகரில் 2019 டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது 

இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது. 

கொரோனாவின் ஆரம்ப காலத்தில் வுகான் நகரத்தில் ஹுவானன் சந்தைதான் தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. 

இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும். 

இந்தத் தரவுகள் 3 ஆண்டுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!