யாழில் தாய் பால் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்த குழந்தை
#baby
#children
#Death
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்
குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் , குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.



