கடற்றொழிலாளர்களின் தொழில் முறைமை தொடர்பில் டக்ளஸ் எடுத்த நடவடிக்கை!

#SriLanka #Jaffna #Douglas Devananda #Fisherman #Fish #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
கடற்றொழிலாளர்களின் தொழில் முறைமை தொடர்பில் டக்ளஸ் எடுத்த  நடவடிக்கை!

மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற கடற்றொழில் அனுமதிகள் ஏனைய மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

அதாவது, உள்ளூர் இழுவைமடிப் படகுகளின் செயற்பாடுகள், சிலிண்டர் பாவனை  மற்றும் கம்பி பயன்பாடு போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை கிளிநொச்சி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

இந்நிலையில், குருநகர் இழுவைமடித் தொழில் முறைமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் மாவட்டத்தில் அனுமதி வழக்கப்பட்டுள்ள சிலிண்டர் தொழில் முறை, கம்பி பயன்படுத்தல் போன்றவை மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையூறாக இருப்பின் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!