ஆசிரியர் இடமாற்ற நெருக்கடி நீடிப்பு

#SriLanka #Sri Lanka Teachers #sri lanka tamil news #Lanka4 #education #Ministry of Education
Prathees
2 years ago
ஆசிரியர் இடமாற்ற நெருக்கடி நீடிப்பு

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக அரசாங்கம் நேற்று (17) அறிவித்துள்ளது.

ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த 12இ500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், புதிய பாடசாலை தவணை ஆரம்பமானதும் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் அனைத்து ஆசிரியர் இடமாற்றங்களும் இதே முறையில் மேற்கொள்ளப்படும் என ஆசிரியர் இடமாற்ற சபையின் உறுப்பினர் வணக்கத்திற்குரிய யல்வல பன்னசேகர தேரர் தெரிவிக்கின்றார்.

28ஆம் திகதி முதல் அனைத்து இடமாற்றங்களும் அமுல்படுத்தப்படும். விடுவிக்காத அதிபர்கள் இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.முழுமையாக தடுத்தால் நாடு முடங்கிவிடும் என பன்னசேகர தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  ​​ஆசிரியர் இடமாற்றச் சபையைக் கூட்டி கலந்துரையாடி திங்கட்கிழமை சில தீர்மானங்கள் எட்டப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!