பயங்கரமான நிலையில் இருந்து நாடு மீண்டுள்ளது: நிதி இராஜாங்க அமைச்சர்
#economy
#SriLanka
#sri lanka tamil news
#government
#inflation
#Lanka4
Prathees
2 years ago

சரியான முறையில் நிர்வகிக்கப்படாவிட்டால் கடந்த காலாண்டில் கடந்த ஆண்டு எதிர்மறையான 12.4% பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அது மைனஸ் 20 ஆக இருந்திருக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தரவு அறிக்கைகள் தொடர்பில் ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் எதிர்மறையான 20% ஆக இருந்தால், உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.



