காரை நகரில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

#Jaffna #Robbery #Police #Arrest #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
காரை நகரில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர்  கோவளம் பகுதியில் இன்று மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று அப்பகுதி  மக்களால் மடக்கி  பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனம் ஒன்றும் திருடப்பட்ட வீட்டு நிலைகளும் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது.

சுழிபுரம், பண்டத்தரிப்பு பகுதிகளைச் சேர்ந்த ஐவர் அடங்கிய இளைஞர் குழு ஒன்று இவ்வாறு காரைநகர் கோவள பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள வீட்டு நிலைகளை  திருடிய சந்தர்ப்பத்தில் அப்பகுதிமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

காரைநகர் - மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்றைய தினம் கோவளப்பகுதி மக்களின் திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பிடிக்கப்பட்டவர்களில்  ஒருவர் காரைநகர்  பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!