முன்னாள் காதலியை நீதிமன்றத்தில் வைத்து அறைந்தவருக்கு விளக்கமறியல்

#Police #Arrest #Court Order #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
முன்னாள் காதலியை நீதிமன்றத்தில் வைத்து அறைந்தவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நீதிபதியின் முன்பாக, முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் பக்கத்து வீட்டு யுவதியுடன் காதல் வசப்பட்டுள்ளார் . எனினும், பின்னர் அவரது நடத்தையால் அதிருப்தியடைந்த யுவதி, காதல் உறவை நிறுத்தி விட்டார்.

எனினும், அந்த இளைஞன் யுவதிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததுடன், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிசாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது எதிராளி சாட்சியம் அளித்து விட்டு வரும்போது, சந்தேகநபர் அவரது கன்னத்தில் அறைந்துள்ளார் . நீதவானின் முன்பாக இந்த சம்பவம் நடந்தது.

இளைஞன் மீது பாலியல் துன்புறுத்தல், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு நீதவான் கட்டளை இட்டதுடன், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக ஏற்கெனவே பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!