பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறும்
#strike
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம் இடம்பெறுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



