மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார் கைது!

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார் கைது!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முகேஷ் ராஜ் என்பவருக்கும் கிருத்திகா என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் படுத்திருந்த கிருத்திகா மீது இன்று அதிகாலை குடும்பப் பிரச்சனை காரணமாக மாமியார் ஆண்டாள் ஆசிட்டை வீசியுள்ளார். மேலும்,கொசு மருந்தான ஆல் அவுட்டை வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார்.

அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு விருத்தாசலம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வலது கண் பார்வை இழந்து விட்டதால் அறுவை சிகிச்சைக்காக தற்போது புதுச்சேரி மருத்துவமனையில் கிருத்திகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தொடர்பாக மாமியார் ஆண்டாளை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!