இத்தாலி வேலைவாய்ப்புக்கு இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது

#Italy #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Job Vacancy #Foriegn
Prathees
2 years ago
இத்தாலி வேலைவாய்ப்புக்கு  இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது

இத்தாலியில் வேலை ஒதுக்கீட்டிற்கு இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையின் கீழ் வேலை வாய்ப்புகளுக்கு இத்தாலியிலுள்ள முதலாளிகளும் வர்த்தக நிறுவனங்களும் விண்ணப்பிக்க வேண்டுமென இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த தெரிவித்துள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (விமான நிலையம் மற்றும் ஊக்குவிப்பு)  ஐ.பதிநாயக்க குறிப்பிடுகிறார்.

எனவே, இத்தாலிய வேலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக எந்தவொரு நபருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!