வருகிறது ஐபோன் ஸ்மார்ட் வாட்ச்! இனி சர்க்கரை நோய் பரிசோதனைக்காக ரத்தம் சிந்த வேண்டாம்
#technology
#Tech
Mani
2 years ago
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணிக்கும் புதிய வசதியை ஆப்பிள் நிறுவனம் தனது வாட்சில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் 2010யில் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமை பதவியில் இருந்த போதிலிருந்தே இந்த திட்டம் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது.
தற்போது வரை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டுபிடிக்க ஊசி மூலம் துளையிட்டு ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்பட்டு வருவது வலிமிகுந்ததாக உள்ளது. இதனை தவிர்க்க உலகின் முன்னணி மருத்துவமனைகளுடன் ஆப்பிள் நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர்
மணிக்கட்டில் உள்ள ரத்த நாளங்களை ஊடுருவி ஸ்கேன் செய்யும் optical spectroscopy ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியாக கணித்துவிடுகிறது.
இன்னும் ஓராண்டில் இந்த புதிய அம்சத்தை சந்தைக்கு கொண்டு வர ஆப்பிள் காப்புரிமை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.